search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் குவிந்த மதுப் பிரியர்களை படத்தில் காணலாம்.
    X
    நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் குவிந்த மதுப் பிரியர்களை படத்தில் காணலாம்.

    3 நாட்கள் விடுமுறை எதிரொலி: நாகை மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

    மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நாகை பகுதி மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் மொத்தமாக பைகளில் வாங்கி சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வரும் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே-2-ந்தேதியும் மதுக்கடைகள், மற்றும் அதனுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் முறைகேடான மது விற்பனையை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை பொறுத்தவரை மொத்தம் 102 மதுக்கடைகள் உள்ளன. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து 3 நாட்களுக்கு சேர்த்து குடிப்பதற்காக சிலர் பைகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். மேலும் சில கடைகளில் குறைந்த விலை மது பாட்டில்கள் வேகமாக விற்றதால், வேறு வழியில்லாமல் சிலர் விலை உயர்ந்த மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். 3 நாட்கள் விடுமுறை என்பதால் நாகையில் உள்ள மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    தேர்தலை முன்னிட்டு அதிக அளவு மது பாட்டில்கள் முன்கூட்டியே விற்பனையாகி விட்டதால் விரும்பிய மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை என்று மதுப்பிரியர்கள் கூறினர்.
    Next Story
    ×