என் மலர்
செய்திகள்

கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசிய போது எடுத்த படம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தரப்படும் - டி.டி.வி. தினகரன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று கந்தர்வகோட்டையில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியின் அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.மு.மு.க. ஆட்சிக்கு வந்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தரப்படும். குடும்பத்தில் உள்ள படித்த ஆண்கள், பெண்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் வீடு தேடி வரும். அனைத்து நகரப் பகுதிகளிலும் முறையான கழிவு நீர் வாய்க்கால்கள் அமைத்து தரப்படும்.
தரமான சாலை வசதி செய்து தரப்படும். கல்வி, சுகாதாரம் பாதுகாக்கப்படும் . சாதி, மதம், இனம் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பொதுமக்களை நோக்கி கும்பிட்டபடி நின்றனர்.
Next Story






