என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வேளாங்கண்ணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

    வேளாங்கண்ணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கொல்லன் திடல் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மகன் சுசிந்திரன் (வயது30).இவர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சுசிந்திரன் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு ரெயில் நிலையம் வழியாக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கறிகடை முச்சந்தி அருகே சென்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுசிந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×