என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 3 டன் அரிசி பறிமுதல்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 3 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள், வீடியோ கண்காணிப்பாளர்கள், தேர்தல்நிலை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் காஞ்சீபுரம் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காஞ்சீபுரத்தில் இருந்து ஆரணிக்கு செல்வதற்காக மினி லாரி வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்ததில் மூட்டை, மூட்டையாக அரிசி இருந்தது. இதற்கான ஆவணத்தை அதிகாரிகள் கேட்டனர். அப்போது டிரைவரிடம் இதற்கான ஆவணங்கள் இல்லை. இதனால் 150 மூட்டைகளில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 3 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் ஆவணத்தை காண்பித்து அரிசியை பெற்று செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
    Next Story
    ×