என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூரில் மேலும் 6 ரவுடிகள் கைது

    குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளால் தேர்தலின்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.
    வேலூர்:

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளால் தேர்தலின்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மக்கானை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது25), சத்துவாச்சாரியை சேர்ந்த சவுந்தர்ராஜன், தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி சின்ன அப்பு (29) உள்பட 5 பேரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கைது செய்தார். இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் சமூக விரோதிகளின் செயல்கள் அதிகமாக உள்ளதாக வந்த புகாரை அடுத்து அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ரங்காபுரம் பகுதியில் ரவுடி பாஸ்கரன் என்ற சுக்ரி (24) என்பவரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சத்துவாச்சாரி போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×