search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    புதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

    புதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இதற்காக 13 மையங்கள் தயார் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

    முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

    முதல் நாளான நேற்று முன்தினம் 36 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில் இதுவரை சுகாதார பணியாளர்கள் 9 ஆயிரத்து 668 பேர், முன்கள பணியாளர்கள் 293 பேர், பொதுமக்கள் 36 பேர் என 10 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,485 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 29 பேருக்கு தொற்று உறுதியானது. 32 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 39 ஆயிரத்து 763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 79 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 95 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் உயிரிழப்பு 1.68 சதவீதமாகவும், குணமடைவது 97.88 சதவீதமாகவும் உள்ளது.
    Next Story
    ×