என் மலர்

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தந்தை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தஞ்சையில் வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் சுஜய் (வயது20). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்தநிலையில் சுஜய்யை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாயே என்று அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுஜய் மதுவில் வி‌‌ஷம் கலந்து குடித்துள்ளார். 

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஜய் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குந்தவைநாச்சியார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×