search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    தஞ்சை ஜெபமாலைபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜெபமாலைபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தொ.மு.ச. மத்திய சங்க துணை பொது செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. பொது செயலாளர் கஸ்தூரி, சி.ஐ.டி.யூ. துணை செயலாளர் ராமசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை தலைவர் துரை.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் 1-9-2019 முதலான 17 மாத இடைக்கால நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொ.மு.ச. செயலாளர் ரங்கராஜ் , கலியமூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி சண்முகம், ஐ.என்.டி.யூ.சி இளவழகன், ஓய்வு பெற்றோர் சங்கம் அப்பாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேப்போல் தஞ்சை விரைவு போக்குவரத்து பணிமனைக்கு தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் காரணமாக பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

    இதில் கூட்டமைப்பு தலைவரும் எல்.பி.எப். செயலாளருமான ராஜேந்திரன், மத்திய சங்க தலைவர் வெங்கடேசன், பணிமனை தலைவர் செங்குட்டுவன், எல்.பி.எப். பொருளாளர் திருமாறன், சி.ஐ.டி.யூ. துணை தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பணியை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயங்கின. இன்று 3-வது நாளாகவும் இயங்கிய அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தொலைதூர பஸ்கள் இயக்கப்படாததால் பலர் வெளியூர் பயணத்தை தவிர்த்துள்ளனர். இயக்கப்பட்ட சில அரசு பஸ்களிலும் கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டதால் பலர் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கம்போல் முழு அளவில் இயங்கிய தனியார் பஸ்களில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    Next Story
    ×