என் மலர்

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கந்தம்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கந்தம்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலியானாள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தம்பாளையம்:

    கந்தம்பாளையம் அருகே உள்ள சிறுபூலாம்பாளையம் வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். விவசாயி. இவர் தனது மனைவி, 2 மகள்களுடன் வசித்து வந்தார். இதில் மூத்த மகள் ஜோசினி (வயது 7) அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று தோட்டத்திற்கு சென்ற சிறுமி ஜோசினி ஆட்டை விரட்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாள். உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி ஜோசினி பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×