search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.டி.பி.ஐ.
    X
    எஸ்.டி.பி.ஐ.

    தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சேருமா?

    வருகிற சட்டசபை தேர்தலில் எஸ்.டி.பி.ஐ.கட்சியை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய 10 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இவற்றில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை முஸ்லிகள் அதிகமாக உள்ள கட்சியாகும்.

    இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியையும் தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோன்று தங்கள் அணியில் எஸ்.டி. பி.ஐ.கட்சியையும் சேர்த்து விட்டால் முஸ்லிம் ஓட்டு களை முழுமையாக பெற்று விடலாம் என்று அக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் விரும்புகிறார்கள்.

    இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சேருமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வகையில் ஓட்டுகளை பெற்றது.

    சிதம்பரம் தொகுதியில் 1,775 ஓட்டுகள் அக்கட்சிக்கு கிடைத்தன. அந்த தொகுதியில் 1,506 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருந்தது. கிணத்துகடவு தொகுதியில் 1,367 ஓட்டுகளையும், அறந்தாங்கியில் 1,741 ஓட்டுகளையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி பெற்று இருந்தது.

    இந்த 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர் தோற்பதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பிரித்த ஓட்டுகளே முக்கிய காரணமாக அமைந்திருந்தன என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.

    இதே போன்று கரூர், பெரம்பூர், திருப்போரூர், கவுண்டம்பாளையம், காட்டுமன்னார்கோவில், பேராவூரணி, தென்காசி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் மிகவும் குறைந்த ஓட்டுகளிலேயே தோல்வியை தழுவினார்கள்.

    இந்த இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கணிசமான அளவு ஓட்டுகள் இருப்பதாகவும் அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×