என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  அறந்தாங்கியில் பீரோவை உடைத்து நகை - பணம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அறந்தாங்கியில் பீரோவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
  அறந்தாங்கி:

  அறந்தாங்கி கட்டுமாவடி சாலை பகுதியை சேர்ந்தவர் ராக்கம்மாள் (வயது 70). இவரது கணவர் இறந்துவிட்டார். மகன்களுக்கு திருமணமாகி அறந்தாங்கி எல்.என்.புரத்தில் வசித்து வருகின்றனர். இதனால் கட்டுமாவடி சாலையில் உள்ள வீட்டில் ராக்கம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

  இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராக்கம்மாள் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் மகன்வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 4½பவுன்தங்க நகை, ரூ.1½ லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில், மர்மநபர்கள் கள்ளசாவியால் வீட்டின் கதவை திறந்து, பீேராவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×