என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
திருவள்ளூர் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள்
திருவள்ளூர் சிறப்பு முகாமில் சமுதாய சுகாதார செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணை இயக்குனர் டாக்டர் கே.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.
இந்த சிறப்பு முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர். இம்முகாமில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசிஸ்ரீவத்சவ், மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராணி, திருவள்ளூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் மற்றும் சுகாதார அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story