search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    தர்மபுரியில் போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

    தர்மபுரியில் போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் கார்த்திகா தொடங்கி வைத்தார்

    தர்மபுரியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார், பொதுமக்கள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் கார்த்திகா தொடங்கிவைத்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், உதவி கலெக்டர் பிரதாப், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    போலீஸ் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிள்களில் இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவ கல்லூரி வழியாக ஊர்வலமாக வந்தனர். முடிவில் 4- ரோடு சந்திப்பை வந்தடைந்தனர். இந்த ஊர்வலத்தின் முடிவில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், ஹெல்மட் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×