என் மலர்
செய்திகள்

பிரதமர் மோடி
மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் தொடக்க விழா- பிரதமர் மோடி 14ந்தேதி சென்னை வருகை
சென்னை கடற்கரை-அத்திப்பட்டு 4வது வழித்தடம் தொடக்கம் மற்றும் விழுப்புரம்-தஞ்சாவூர்-திருவாரூர் ஒருவழிப்பாதை மின்மயமாக்குதல் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி 14ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 19-ந்தேதி டெல்லி சென்றிருந்தபோது பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க சென்னை வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி காலை சென்னை வருகிறார். அவரது நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் பிரதமர் மோடி 10.35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கு முக்கிய பிரமுகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மோடி மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ். தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்ட நீட்டிப்பு-வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
சென்னை கடற்கரை- அத்திப்பட்டு 4-வது வழித்தடம் தொடக்கம் மற்றும் விழுப்புரம்-தஞ்சாவூர்- திருவாரூர் ஒருவழிப்பாதை மின்மயமாக்குதல் ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதே நிகழ்ச்சியில் ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட எம்.பி.டி. அர்ஜுன் எம்.கே.1ஏ பீரங்கி கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.
கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகம் (ஐ.ஐ.டி. சென்னை) ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார்.
11.15 மணியில் இருந்து 12.30 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அறையில் பிரதமர் மோடி தேனீர் அருந்துகிறார். 15 நிமிட நேரம் இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
12.50 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் தளத்துக்கு காரில் செல்கிறார். பிறகு சென்னை விமான நிலையத்துக்கு 1.30 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்றடைந்ததும் தனி விமானம் மூலம் 1.35 மணிக்கு கொச்சி செல்கிறார்.
14-ந்தேதி சென்னையில் பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story