என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மானாமதுரை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

    மானாமதுரை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் தஸ்வந்தபிரியன் (வயது 12). 5-ம் வகுப்பு படித்து வந்தான். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மகன் பிரஜின் (8). 3-ம் வகுப்பு படித்து வந்தான். தஸ்வந்தபிரியனும், பிரிஜினும் நண்பர்கள். நேற்று மாலை ஊருக்கு வெளியே ஒரு பண்ணைக்குட்டைக்கு இருவரும் சென்றனர். குட்டையை பார்த்ததும் உற்சாகத்துடன் அதில் இறங்கி விளையாடினர். 

    அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

    இந்த மாதத்தில் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி இதுவரை 11 சிறுவர்-சிறுமிகள் பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×