என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  குழந்தை திருமணம் செய்த சிறுமி தற்கொலை - போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தை திருமணம் செய்த சிறுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
  காட்பாடி:

  வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சிறுமி, கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளாள். குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். பகலில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி மாடிக்கு சென்று அங்கு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். மாலையில் வேலை முடிந்து வந்தவர்கள் சிறுமியை தேடியபோது வீட்டின் மாடியில் அவள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

  இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை திருமணம் நடந்தது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×