என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  அரியாங்குப்பத்தில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியாங்குப்பத்தில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
  புதுச்சேரி:

  அரியாங்குப்பம் சோழபுரம் காய்தேமில்லத் வீதியை சேர்ந்தவர் முரளிகுமார் (வயது48). இவர் கடலூரில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

  நேற்று காலை முரளிகுமார் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு வியர்வை அதிகமாக கொட்டியதால் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றார். அங்கு திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

  உடனே பதறி போன நாகம்மாள் தனது கணவரின் சகோதரர் அகிலன் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றார்.

  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முரளிகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீர் நெஞ்சு வலியால் முரளிகுமார் இறந்ததாக கூறப்படுகிறது.

  இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×