என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  தீவட்டிப்பட்டி அருகே ஊராட்சி தலைவரின் மகன் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தீவட்டிப்பட்டி அருகே ஊராட்சி தலைவரின் மகன் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஓமலூர்:

  ஓமலூரை அடுத்த குண்டுக்கல் ஊராட்சி கொட்டாளூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 30), நில புரோக்கர். இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் பிரேம்குமார், ஜெகநாதன் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தீவட்டிப்பட்டிக்கு சென்று சாப்பிட்டு விட்டு திரும்பினர். மோட்டார் சைக்கிளை பிரேம்குமார் ஓட்ட ஜெகதாநன், ராமலிங்கம் ஆகிய இருவரும் பின்னால் உட்கார்ந்து சென்று உள்ளனர்.

  அப்போது தர்மபுரி மெயின் ரோட்டில் காமராஜர் சிலை அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் சாலையோரம் உள்ள தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதி 3 பேரும் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேம்குமார் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பிரேம்குமார் குண்டுக்கல் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமியின் மகன் ஆவார்.

  Next Story
  ×