என் மலர்

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கூத்தாநல்லூர் அருகே கழுத்தில் கயிறு இறுக்கி கல்லூரி மாணவி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கூத்தாநல்லூர் அருகே துணி காய வைக்க கொடி கட்டியபோது கழுத்தில் கயிறு இறுக்கி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள குடிதாங்கிச்சேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மகள் அபிநயா (வயது20). இவர் மன்னார்குடி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அபிநயா தனது வீட்டின் மாடியில் துணிகள் காய வைப்பதற்கு கொடி கட்டி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபிநயாவின் கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு கழுத்தை இறுக்கியதாக கூறப்படுகிறது.

    நீண்ட நேரம் கயிறு இறுகிய நிலையில் அவருடைய அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் மாடியில் ஏறிச்சென்று பார்த்துள்ளனர். அங்கு கழுத்தில் சிக்கிய கயிற்றுடன் அவர் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபிநயா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×