search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடக்காடு பகுதியில் எந்திரம் மூலம் பச்சை தேயிலை பறிக்கும் பணி நடந்த காட்சி.
    X
    எடக்காடு பகுதியில் எந்திரம் மூலம் பச்சை தேயிலை பறிக்கும் பணி நடந்த காட்சி.

    மழை காரணமாக மகசூல் அதிகரிப்பு- பச்சை தேயிலை பறிக்கும் பணி மும்முரம்

    மழை காரணமாக மகசூல் அதிகரித்து உள்ளதால் பச்சை தேயிலை பறிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது பச்சை தேயிலை விவசாயம். இதனை நம்பி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளும், ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

    வருடந்தோறும் பனியின் தாக்கம் அதிகரித்து தேயிலை செடிகள் கருகி விடுவதால் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்கள் அனைத்தும் பொலிவிழந்து காணப்படும். இதனால் விவசாயிகள் முன்கூட்டியே தேயிலையை பறித்து விடுவார்கள்.

    இந்த நிலையில் மஞ்சூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் தேயிலை செடிகளில் தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள பச்சை தேயிலையில் கொழுந்து இலைகளை பறிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இங்குள்ள தேயிலை தோட்டங்களில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பச்சை தேயிலைகளை பறிப்பதை அதிகம் காண முடிகிறது. மழை காரணமாக பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×