என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
நொய்யல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் மீது வழக்கு
நொய்யல் அருகே புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
தளவாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் வேலாயுதம்பாளையம் போலீசார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக தளவாபாளையம் பகுதியை சேர்ந்த அரசுகோடி (வயது 29), மாதவன் (28), பாஸ்கர் (55), பாலகிருஷ்ணன் (60) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






