என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  முசிறி:

  திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

  இந்தநிலையில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் முசிறி காவிரிஆற்றில் அமைந்துள்ள தந்தைபெரியார் பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலையில் இருந்து முசிறி நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர்.

  அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறவே, இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா மேலசீதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 29), முசிறி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பதும், இருவரும், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

  மேலும் தினேஷ்குமாரின் அண்ணன் சதீஷ்குமாருக்கும் (29) இந்த திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரபாகரன், தினேஷ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஷ்குமாரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×