என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை மாவட்டம் புளியங்குடியில் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நெல்லை:

    கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 33).

    இவர் எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். தனது உறவினர் பெண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட பிரேம்குமாருக்கு 9 வயதில் மகள் உள்ளார்.

    கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புளியங்குடி பகுதிக்கு தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உறவினரின் மகளுக்கும், பிரேம்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிளஸ்-2 படிக்கும் அந்த மாணவியை பிரேம்குமார் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த சம்பவம் அவரது உறவினருக்கு தெரியவந்தது. உடனே பிரேம்குமார் வால்பாறைக்கு தப்பி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புளியங்குடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×