என் மலர்

  செய்திகள்

  தொடர் மழையால் மணப்பட்டு ஏரி நிரம்பி வழிவதை படத்தில் காணலாம்.
  X
  தொடர் மழையால் மணப்பட்டு ஏரி நிரம்பி வழிவதை படத்தில் காணலாம்.

  பாகூர் பகுதியில் 173 செ.மீ. மழை பதிவானது- நீர்நிலைகள் மீண்டும் நிரம்பி வழிகின்றன

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகூர் பகுதிகளில் நவம்பர் மாதம் முதல் நேற்று வரை 173.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நீர்நிலைகள் மீண்டும் நிரம்பி வழிகின்றன.
  பாகூர்:

  புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் கடந்த பருவமழை காலமான நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பலத்த மழை பெய்தது‌. பருவமழை தவறி குளிர்காலமான ஜனவரி மாதத்திலும் மழை பெய்து வருகிறது.

  நிவர், புரெவி புயலால் தொடர்ந்து பெய்த கன மழையால் பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளும், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட 3 அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக புதுவை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பாகூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரையாம்புத்தூர், சோரியாங்குப்பம், இருளன்சந்தை, கன்னியக்கோவில், மணப்பட்டு, கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

  பாகூர், கரிக்கலாம்பாக்கம், கரையாம்புத்தூர், கிருமாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த சுமார் 500 ஏக்கருக்கு மேல் உள்ள நெற்பயிர்கள் கனமழையால் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகி காணப்படுகிறது. வயல்களில் மழைநீர் வடிந்தாலும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  பாகூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து நேற்று வரை 173.2 செ.மீ. மழை பெய்துள்ளது. இது அதிகப்படியான மழையாகும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  7 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட மழைக்கு பிறகு தற்போது அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

  பாகூர் பகுதிகளில் 24 ஏரிகள் மற்றும் தடுப்பணைகள் மூலம் சுமார் 750 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொது பணித்துறை உதவிப்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×