search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சங்கராபுரத்தில் குழந்தையுடன் தாய் கடத்தல்- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சங்கராபுரத்தில் குழந்தையுடன் இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சங்கராபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம், ஐங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரை மகன் இளங்கோ(வயது 38). இவர் தனது மனைவி மாயாவதி(35) மற்றும் குழந்தைகளுடன் சங்கராபுரத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வந்தார்.

    இந்நிலையில் மாயாவதி அவரது ஒரு வயது குழந்தை யுவனேஸ்வரனுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ மனைவி மற்றும் குழந்தையை தேடி அலைந்தார். ஆனால் எங்கு தேடியும் அவர்களை காணவில்லை. விசாரணையில் தேவபாண்டலத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் அருள்(36) என்பவர் மாயாவதியையும் அவரது குழந்தையையும் கடத்தி சென்றது தெரிய வந்தது. 

    இது குறித்து சங்கராபுரம் போலீசில் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் தாயையும், அவர்களை கடத்திய வாலிபரையும் வலைவீசி தேடி வருகிறார்.
    Next Story
    ×