என் மலர்
செய்திகள்

கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கர்ப்பிணிகள் தங்கும் அறையை படத்தில் காணலாம்.
பழையனூரில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாத கர்ப்பிணிகள் தங்கும் அறை- பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
பழையனூரில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருக்கும் கர்ப்பிணிகள் தங்கும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பழையனூர் கிராமம். இப்பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அவசர சிகிச்சை மற்றும் பிரசவத்திற்காக பழையனூரில் உள்ள சுகாதார நிலையத்துக்கு வருகிறார்கள். சுகாதார நிலையம் அருகில் ரூ.24 லட்சம் மதிப்பில் புதிதாக கர்ப்பிணிகள் தங்கும் அறை கட்டப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் கர்ப்பிணிகள் தங்கும் அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. தினமும் 20-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக இங்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் அவசர சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவண்ணாமலைக்கு சென்று வந்தோம். இதனால் இப்பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கர்ப்பிணிகள் தங்கும் அறை கட்டப்பட்டது.
கட்டிமுடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் அதை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளின் நலன் கருதி கர்ப்பிணிகள் தங்கும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story






