என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்பு பேக்கிங் செய்யும் பணி
    X
    பொங்கல் பரிசு தொகுப்பு பேக்கிங் செய்யும் பணி

    நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

    வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டு தோறும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும், என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் சர்க்கரை, முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வேலூர் தொரப்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பரிசு தொகுப்பு பைகளில் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்பணி முடிவடையும் என்றும், வருகிற 4-ந் தேதியில் இருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×