என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தச்சு தொழிலாளி பலி

    ஈரோட்டில் ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தச்சு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அதியமான்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38) . தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஈரோடு பவானிரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் எம்.ஜி.ஆர்.நகர் பிரிவு பகுதியில் சென்றபோது, எதிரில் வந்துகொண்டு இருந்த சரக்கு ஆட்டோவும், ஆறுமுகம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன. 

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×