என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஓசூர் அருகே கார் மோதி டிரைவர் பலி
ஓசூர் அருகே கார் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
சிவகங்கை மாவட்டம் மானமதுரை தாலுகா கீழ்மேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் (வயது 48). லாரி டிரைவர். சம்பவத்தன்று ஓசூர் வந்திருந்த அவர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் குமுதேப்பள்ளி அருகே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற கார் மோதியதில் விவேக் பலியானார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






