என் மலர்
செய்திகள்

டிடிவி தினகரன்
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக லக்கி முருகன் நியமனம்- டி.டி.வி.தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக லக்கி முருகன் நியமிக்கப்படுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜீவானந்தம் விடுவிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் லக்கி முருகன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவராக ஏ.ஜி. பஞ்சாட்சரம் நியமிக்கப்படுகிறார்.
வேலூர் மாநகர் புறநகர் மாவட்ட பணிகளை விரிவுப்படுத்தும் வகையில் அமைப்பு ரீதியாக இரு மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் கீழ்கண்டவாறு மறுசீரமைக்கப்படுகிறது.
வேலூர் மாநகர் மாவட்டம்- 1.வேலூர், 2. காட்பாடி, 3. அணைக்கட்டு.
வேலூர் புறநகர் மாவட்டம்- 1. குடியாத்தம், 2. கே.வி.குப்பம்.
வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் ஏ.எஸ்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் சத்தியா என்ற சதீஷ்குமார் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
இதுவரை வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜெயந்தி பத்மநாபன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் அமைப்பு செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றுவார்.
திருவண்ணாமலை மத்திய மாவட்டம், தெற்கு மாவட்ட பணிகளை விரிவுப்படுத்தும் வகையில் அமைப்பு ரீதியாக இரு மாவட்டங்களுக்கும் உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் கீழ்கண்டவாறு அமைக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை மத்திய மாவட்டம்- 1. போளூர், 2. கலசப்பாக்கம்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்- 1. திருவண்ணாமலை, 2. செங்கம், 3. கீழ்பொன்னாத்தூர்.
திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் அம்மா பேரவை செயலாளரான விஜயகுமார் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் செங்கம் ஏ.பரந்தாமன் நியமிக்கப்படுகிறார்.
இதுவரை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.ஜி.பஞ்சாட்சரம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனை பேணி காக்கும் வகையில் புதிய சார்பு அணியாக வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு உருவாக்கப்படுகிறது.
இதன் செயலாளராக கழக மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர் பி. செந்தில்குமார் (அயர்லாந்து) நியமிக்கப்படுகிறார்.
இதே போல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணி அம்மா முன்னேற்ற கழகத்தில் புதிதாக உருவாக்கப்படுகிறது. இதன் தலைவராக தாம்பரம் நாராயணன், செயலாளராக வழக்கறிஞர் நல்லத்துரை நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story