என் மலர்
செய்திகள்

விபத்து
தூசி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி பலி
தூசி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா சிறுநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமலை (வயது 42), தொழிலாளி. அவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு முத்துலட்சுமி (17), அனுசியா (15) என 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி தணிகைமலை மோட்டார் சைக்கிளில் மாந்தோப்பு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தணிகைமலை ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த தணிகைமலை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






