search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயோ மெட்ரிக் எந்திரம் கோளாறு காரணமாக வேலை செய்யாததால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் காத்திருந்த பொதுமக்கள்.
    X
    பயோ மெட்ரிக் எந்திரம் கோளாறு காரணமாக வேலை செய்யாததால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் காத்திருந்த பொதுமக்கள்.

    பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பதிவு ஆகாததால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி

    மானாமதுரை தாலுகாவில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பதிவு ஆகாததால் ரேஷன் பொருட்களை வினியோகிக்க முடியவில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை தாலுகாவில் 60 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் அறிமுகத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன்கார்டில் கைரேகை வைத்தால் தான் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரேஷன்கார்டுதாரர்களின் கைரேகை ரேஷன்கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் எந்திரத்தில் சரிவர பதிவாகவில்லை. இதனால் ஒருவருக்கு பொருட்கள் வழங்குவதற்கோ ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் ஆனது. இதையடுத்து ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடும் சிரமம் அடைகிறார்கள். பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து பழைய நடைமுறைப்படி ஸ்மார்ட் கார்டு, அங்குள்ள பயோ மெட்ரிக் எந்திரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்்டு வந்தன.

    இந்த நிலையில் மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் நேற்று மீண்டும் ரேஷன்கார்டுதாரர்கள் கைரேகை வைத்தால் தான் பொருட்கள் வழங்க முடியும் என அறிவித்தனர். இதையடுத்து ரேஷன்கார்டுதாரர்கள் அங்குள்ள பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை வைத்தும் சர்வர் கோளாறு காரணமாக அது பதிவாகவில்லை. இதனால் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடை ஊழியர்களுக்கும், ரேஷன்கார்டுதாரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பல மணி நேரம் ரேஷன்கார்டுதாரர்கள் கடை முன் காத்து கிடந்தனர். பலமுறை கைரேகை வைத்தும் பதிவாகாததால் பொருட்கள் கிடைக்காமல் திரும்பி சென்றனர். பலர் ரேஷன் கடை முன்பே சர்வர் சரியாகி விடும். கைரேகை பதிவாகி விடும் என நம்பிக்கையில் நீண்ட நேரம் காத்து கிடந்தனர். இந்த பிரச்சினை மாவட்டம் முழுவதும் நீடித்தது. கீழ்பசலை கிராமத்திலும் சர்வர் கோளாறால் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்து கிடந்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, ரேஷன்கடை எந்திரத்தில் கைரேகை பதிவாகாததால் பொருட்கள் வாங்க முடியாமல் பலர் அவதிப்பட்டு உள்ளோம். எனவே ரேஷன் கடைகளில் பழைய நடைமுறையை பின்பற்றி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்கள் வாங்குவதற்காக இங்கு பலமணி நேரம் காத்து கிடப்பதால் மற்ற வேலைகளுக்கு செல்ல முடியவில்ைல என்றனர்.
    Next Story
    ×