என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

    விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

    கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி நால் ரோட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி நால் ரோட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ) சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் விவசாய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×