என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வடகாடு அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் மீது வழக்கு
வடகாடு அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகேயுள்ள ஆவணம் கைகாட்டி, நெடுவாசல் பகுதிகளில் வடகாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 30), கறம்பக்காடு பகுதியை சேர்ந்த ஜமீர்கான் (37), பெரியநாயகிபுரம் ஆவணத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (63), நெடுவாசலை சேர்ந்த பாஸ்கர் (45) ஆகிய 4 பேர் மீது வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






