என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மருத்துவ துறைகள் ஒருங்கிணைப்பை கண்டித்து தனியார் கிளினிக் டாக்டர்கள் போராட்டம்

    வேலூர் அருகே மருத்துவ துறைகள் ஒருங்கிணைப்பை கண்டித்து தனியார் கிளினிக் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ துறைகளையும் ஒரே கலவையாக கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக அலோபதி டாக்டர்கள் மட்டுமே செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத டாக்டர்களும் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதை கண்டித்தும், மருத்துவ துறைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தினர். மேலும், தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்தனர். அதன்படி நேற்று தனியார் கிளினிக் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் தனியார் கிளினிக்குகளை மூடி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அனைத்து மருத்துவமனைகளையும் மூடி இருந்தனர். புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. கொரோனா மற்றும் அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

    இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் நர்மதாஅசோக் கூறுகையில், கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் மூடப்பட்டன. திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டன. அவசர சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 300 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் மூடப்பட்டது என்றார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.
    Next Story
    ×