search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    புயல் பாதிப்புக்கு மத்திய குழுவிடம் தேவையான நிதியை தமிழக அரசு கேட்டுள்ளது- முதலமைச்சர்

    நிவர் புயல் பாதிப்புக்கு மத்திய குழுவிடம் தேவையான நிதியை தமிழக அரசு கேட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் பற்றி கணக்கெடுத்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுக்கு அறிக்கை கிடைத்தவுடன் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

    ஒரே நேரத்தில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த போதிய நிதி தேவைப்படுகிறது. புரெவி புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும்.

    நிவர் புயல் பாதிப்புக்கு மத்திய குழுவிடம் தேவையான நிதியை தமிழக அரசு கேட்டுள்ளது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் கனமழைபெய்யும் போது பாதிப்பு அதிகமாகிவிடுகிறது.

    பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கனமழையால் கடலூரில் உள்ள பல ஏரிகளும், குளங்களும் நிரம்பி உள்ளன.

    கனமழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்; தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படும். வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×