என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் -வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருமனை அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
  அருமனை:

  அருமனை அருகே புதுவல் மூடோடு பகுதியை சேர்ந்த அம்பி மகன் அருண்குமார் (வயது28). ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து அருமனையில் இருந்து உத்திரம்கோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது.

  இதில் அருண்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அருமனை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருண்குமாரின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த அருண்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×