என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
குள்ளனம்பட்டி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
குள்ளனம்பட்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வேடபட்டி ஞானநந்தகிரிநகரை சேர்ந்த சகாயராஜ் மகன் ரத்தினராஜ் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கும், யாகப்பன்பட்டியை சேர்ந்த உறவினரின் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே அந்த பெண் ரத்தினராஜை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரத்தினராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story