என் மலர்
செய்திகள்

விபத்து
மொபட்டில் சென்ற பள்ளி மாணவன் சாலையோர பனைமரத்தில் மோதி பலி
களம்பூர் அருகே மொபட்டில் சென்ற பள்ளி மாணவன் சாலையோர பனைமரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
வேலூர் தொரப்பாடியை அடுத்த மேட்டுப்பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவரின் மகன் தினேஷ் (வயது 17). இவர், பிளஸ்-1 படித்து வந்தார். இவரும், அண்ணன் கணேசும் களம்பூரை அடுத்த அரியாத்தூர் கிராமத்தில் உள்ள பாட்டி சிவகாமிஅம்மாளை பார்ப்பதற்காக வந்தனர்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரும், நண்பருமான விக்னேஷ் என்ற விக்கி என்பவருடன் தினேஷ் சேர்ந்து ஒரு மொபட்டில் நேற்று மாலை அரியாத்தூரில் இருந்து புறப்பட்டு கூடலூர் கூட்ரோடை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கூடலூர் கூட்ரோட்டுக்கு முன்னாலேயே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மொபட் சாலையோரம் இருந்த ஒரு பனைமரத்தில் மோதி இருவரும் கீழே விழுந்தனர். மொபட்டை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த விக்கி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம், அவரின் வீட்டுக்கு சென்று தினேசின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story