search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மாணவர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடத்திய காட்சி
    X
    10 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மாணவர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடத்திய காட்சி

    10 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மாணவர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்

    புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாணவர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கான கோப்பு கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் கிரண்பெடி அதற்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசுக்கு அந்த கோப்பை அனுப்பி வைத்தார்.

    எனவே கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும், 10 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும் மாணவர் காங்கிரசார் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை நேருவீதி காமராஜர் சிலை அருகே மாணவர் காங்கிரசார் ஒன்று கூடினர். அங்கிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலத்திற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் தமிழழகன், சண்முகம், டேனியல், பொதுச்செயலாளர்கள் பாரதி, கார்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி நேருவீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி தீப்பந்தங்கள் ஏந்தி ஊர்வலமாக செல்லக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து அவர்கள் ஊர்வலத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×