என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கோவிலான் வாய்க்காலில் செடி, கொடிகளை அகற்றிய போது எடுத்த படம்.
    X
    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கோவிலான் வாய்க்காலில் செடி, கொடிகளை அகற்றிய போது எடுத்த படம்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் கோவிலான் வாய்க்காலை தூர்வாரும் பணி

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள கோவிலான் வாய்க்கால் பொதுப்பணித்துறை சார்பில் பொக்லின் எந்திரம் மற்றும் கூலி தொழிலாளர்களை கொண்டு தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கோவிலான் வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்கால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் விளக்கு முக தெரு, தெற்கு வெளி, ரெயில்வே ரோடு, கற்கோவில், தொழுதூர், கரைமேடு, எடக்குடி வடபாதி, வடபாதி உள்ளிட்ட பகுதிகளில் வடிவாய்க்காலாக உள்ளது.

    ஆண்டுதோறும் மழை காலங்களில் இந்த வாய்க்காலில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை சாலை முதல் கரைமேடு வரை கோவிலான் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகளை பொக்லின் எந்திரம் மற்றும் கூலி தொழிலாளர்களை கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×