என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தஞ்சை அருகே ஜீப் மோதி வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தஞ்சை அருகே ஜீப் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கள்ளப்பெரம்பூர்

    தஞ்சை அருகே உள்ள சானூரப்பட்டி மேல காலனியை சேர்ந்த சிவன்ராஜ் மகன் ஆனந்தராஜ் (வயது26). சிவன்ராஜ் செங்கிப்பட்டியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். ஆனந்தராஜும் காய்கறி கடையிலேயே தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள முருகன் காலனி அருகே ஆனந்தராஜ் சாலையை கடக்க முயன்றார். 

    அப்போது அந்த வழியாக வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×