என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    20 சதவீத போனஸ் வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தீபாவளி பண்டிகையையொட்டி 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தமிழகத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், கடத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் நூற்றுக்கணக்கான சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத்தில் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணி, ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பும் பணி ஆகியவை பாதிக்கப்பட்டன.

    தர்மபுரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் தர்மபுரி மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகி பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதேபோல் கடத்தூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கக்கோரி நுகர்பொருள் வாணிப கிடங்கு முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று அரூரிலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 20 சதவீத போனஸ் வழங்க அரசு முன்வர வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    Next Story
    ×