என் மலர்

  செய்திகள்

  பணம் கொள்ளை
  X
  பணம் கொள்ளை

  புரசைவாக்கத்தில் பட்டப்பகலில் தச்சு தொழிலாளி வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரசைவாக்கத்தில் பட்டப்பகலில் தச்சு தொழிலாளி வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  சென்னை புரசைவாக்கம் சுந்தரம் தெருவை சேர்ந்தவர் கைலாஷ் சந்திரா (வயது 45). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு மதியம் 2 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

  இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  Next Story
  ×