என் மலர்
செய்திகள்

கண்காணிப்பு கோபுரம்
கடலூரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரம்
தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்களை தடுக்க கடலூரில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலூர்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பலர் தீபாவளியையொட்டி கடலூர் உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடைகளை வைத்து துணி வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை, மஞ்சக்குப்பம் நேதாஜி சாலைகளில் மாலை வேளையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் வியாபாரிகள் பட்டாசு கடைகள் வைக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, கடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகரில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் கடலூர் முதுநகரிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Next Story