என் மலர்
செய்திகள்

விபத்து
கீரம்பூர் அருகே பெயர் பலகை கம்பத்தில் கார் மோதி, கோழி வியாபாரி பலி
கீரம்பூர் அருகே சாலை ஓரத்தில் இருந்த பெயர் பலகையின் கம்பத்தின் மீது கார் மோதியதில் கோழி வியாபாரி இறந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பரமத்தி வேலூர்:
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 50). கோழி வியாபாரி. இவரும், மகன் பாபிலுதீன் (24) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு காரில் மங்களூரு செல்வதற்காக கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பெயர் பலகையின் கம்பத்தின் மீது மோதியுள்ளது.
இதில் காரின் இடது பக்கத்தில் அமர்ந்து வந்த இஸ்மாயில் மற்றும் காரை ஓட்டிச் சென்ற அவரது மகன் பாபிலுதீன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் இஸ்மாயில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். பாபிலுதீன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






