என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
    X
    அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

    பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    வாழை பயிரை பாதுகாக்க பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணை மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் ஆகிய பாசன கால்வாய் பகுதிகளில் வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு தற்போது உரம் வைக்கப்பட்டு, வாழை குலை தள்ளும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    பாபநாசம் அணையில் தற்போது 115 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய தேவைகளுக்கு தண்ணீர் திறக்கும் காலமாகவும், பிசான பருவ சாகுபடி செய்யும் காலமாகவும் உள்ளது. ஆகையால் வாழையை பாதுகாக்க பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×