என் மலர்
செய்திகள்

X
விபத்து பலி
மங்களமேடு அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
By
மாலை மலர்27 Oct 2020 9:57 AM IST (Updated: 27 Oct 2020 9:57 AM IST)

மங்களமேடு அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் திருவளக்குறிச்சியை சேர்ந்தவர் சரிதா(வயது 31). டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் திட்டக்குடி வட்டம் கழுதூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆட்டோவில் வந்தார்.
நேற்று முன்தினம் அவர் ஆட்டோவில் அவரது உறவினரான புவனேஸ்வரி(40), நவீன்(20) ஆகியோரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். வாலிகண்டபுரம் கருப்பசாமி கோவில் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சரிதா மற்றும் நவீன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
X