என் மலர்
செய்திகள்

கைது
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, குன்றத்தூர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் தரப்பாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். மேலும் அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது, கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மாங்காட்டை சேர்ந்த விஷ்வா (வயது 21), தரப்பாக்கத்தை சேர்ந்த தீபக் (21), இருவரையும் கைது செய்த போலீசார்,கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story