search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த வாரம் பெய்த மழையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
    X
    கடந்த வாரம் பெய்த மழையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

    அரும்பாவூர் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது

    அரும்பாவூர் பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் பெய்த மழையில் இந்த இரண்டு ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
    வேப்பந்தட்டை:

    குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் மறு கட்டுமானம், கழுங்குகளை பழுதுபார்த்தல், வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவை செய்து ஏரிகளில் எல்லைக் கற்களை நடுதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரும்பாவூர் பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் பெய்த மழையில் இந்த இரண்டு ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

    இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021 -ம் ஆண்டு வரை ரூ.9 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 52 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை ஆயிரத்து 22 மில்லியன் கன அடி நீர் தேக்கப்பட்டு 4,832 எக்டேர் நிலங்கள் நேரடியாகவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வு காரணமாகவும் பாசனம் வசதி பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் தொய்வின்றி வேளாண் தொழிலை மேற்கொள்ள தமிழக அரசால் சிறப்பான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×